"மன்னிச்சுருங்க.. நான் அத செய்ய தவறிட்டேன்!".. 'நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள்' அத்தனை பேரையும் 'கண்கலங்க வைத்த' வடகொரிய அதிபரின் 'உருக்கமான' பேச்சு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உணர்ச்சிகரமாக பேசி கண்கலங்கி உள்ள சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

"மன்னிச்சுருங்க.. நான் அத செய்ய தவறிட்டேன்!".. 'நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள்' அத்தனை பேரையும் 'கண்கலங்க வைத்த' வடகொரிய அதிபரின் 'உருக்கமான' பேச்சு!

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் Hwasong-16 என்கிற புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது. இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்றும் உலக அளவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடையே பேசும் பொழுது தங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் அளவு ஆழமாகவும் தம் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக நெகிழ்ந்து பேசியதுடன், அதேசமயம் தான் அதை, நிறைவாக செய்ய தவறியதாகவும் இதற்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தம் நாட்டை வழி நடத்திய தமது தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றி கூறிய கிம் ஜாங் அதன்படி இந்த நாட்டை வழிநடத்தும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதற்கு மக்கள் தம் மீது வைத்த நம்பிக்கைகளுக்கு நன்றி என்றும் தன் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Kim Jong un emotional speech, tears, apology to North Korea people

மக்களின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கிம் பேசும் போது கண் கலங்கி விட்டதாகவும், கிம்மின் உரையைக் கேட்ட மக்களும் கண் கலங்கியதாகவும், ராணுவ வீரர்களுக்கு அவர் ஆற்றிய உரையை கண்டு ராணுவ வீரர்களும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னொருபுறம் அனுதாபத்தை பெறுவதற்காக கிம் இப்படி பேசியுள்ளதாகவும் பலர் வழக்கம்போல் விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்