‘அதிக எடையால் மூழ்கிய கப்பல்’.. 100 பேர் பலி.. உலகை உலுக்கிய விபத்து சம்பவம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இராக்கில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த கப்பல் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானதால் 100 பேர் பலியாகியுள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

‘அதிக எடையால் மூழ்கிய கப்பல்’.. 100 பேர் பலி.. உலகை உலுக்கிய விபத்து சம்பவம்.. வீடியோ!

இராக்கில் பொதுமக்கள் பயணம் செய்த கப்பல், தண்ணீருக்குள் மெல்ல மூழ்கத் தொடங்கியது. உடனே பலரும் நிற்கமுடியாமல் தடுமாறினர். ஆனால் அவரவர் தடுமாற்றம் கப்பலை மேலும் ஆட்டம் காட்டியது. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் மூழ்கிய அந்த கப்பலில் இருந்து பலரும் தண்ணீருக்குள்  மூழ்கத் தொடங்கினர்.

ஐரோப்பாவில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது போல், இராக்கில் தற்போது மூழ்கிய கப்பலில் இருந்த 93 முதல் 100 பேர் வரை கப்பலுடன் சேர்ந்து மூழ்கியுள்ளனர். பலரும் தண்ணீரில் தத்தளித்து பின்னர், அடித்துச் செல்லப்பட்ட கோரமான காட்சிகளும், இந்த கப்பலில் மக்கள் ஏறும்போது, எடை கூடியதால் கப்பல் மூழ்கத் தொடங்குவதும் வீடியோக்களாக இணையத்தில் வலம் வந்து பலரின் இருதயத்தையும் பிழிந்தபடி உள்ளன. இந்த கோரமான விபத்தில் பலியான பலரும் குழந்தைகளும் பெண்களுமாக இருந்துள்ளது இன்னும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ளது மொசுல் என்கிற நகரம்.  இதன் அருகே உள்ள பிரபல சுற்றுலாப் பகுதியான டைகிரிஸ் நதிக்கு மிக அருகில் குர்திஷ் புத்தாண்டினை மக்கள் கொண்டாடியுள்ளனர். அப்படி கொண்டாடும் விதமாக ஒரு சிறிய கப்பலில் ஏறியுள்ளனர். ஆனால் திடீரென கப்பலில் உண்டான கோளாறு, இந்த கொண்டாட்டத்தை விபத்தாக மாற்றியுள்ளது. இதில் 50 பேர் மீட்கப்பட்டதோடு, 100 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

முதலில் அளவுக்கு மீறி மக்களை ஏற்றியதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் இவ்வாறான கப்பலைத் தந்ததற்காக சம்பவ இடத்துக்கு வந்த கவர்னரின் காரை அடித்து உடைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சமீபத்தில் இராக்கில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்தாக இந்த விபத்து கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி, இந்த கோர விபத்தில் பலரும் பலியானதால் அடுத்த 3 நாட்களும் தேசத்தின் துக்க நாட்களாக அனுசரிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ACCIDENT, HEARTBREAKING, MOSUL