லக்கேஜை போல் பெற்ற குழந்தைய மறந்துட்டு ஃபிளைட் ஏறி பறந்த, ‘பாசக்கார’ பெண்மணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கைக்குழந்தை என்பது கைக்கு அடக்கமான பொம்மை அல்ல. இந்த உலகத்திலேயே விழிப்புடனும், கூர்மையுடனும் இருக்கும் அழகான பரிசுத்த ஜீவராசிகளுள் முதன்மையானது.

லக்கேஜை போல் பெற்ற குழந்தைய மறந்துட்டு ஃபிளைட் ஏறி பறந்த, ‘பாசக்கார’ பெண்மணி!

அத்தகைய குழந்தையை நம் கைகளில் வைத்திருக்கும்போது கடவுளே நம் கையில் வைத்திருப்பதுபோல் உணர வேண்டும் என சொல்வார்கள். அத்தகைய குழந்தையைத்தான் தாய் ஒருவர் லக்கேஜை மறந்துவைப்பதுபோல், விமான நிலையத்திலேயே மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்றிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் உள்ளது கிங் அப்துல் அஜீஜ் விமான நிலையம். இங்கிருந்து கோலாலம்பூர் செல்வதற்காக விமானம் கிட்டத்தட்ட புறப்பட்டே  விட்டது. அப்போதுதான் ஒரு பெண்மணி, திடீரென என் குழந்தை, அய்யோ என் குழந்த என கதறியுள்ளார்.

குழந்தை ஒன்றை, தாம் எடுத்து வந்ததையே மறந்துவிட்டு, விமான நிலையத்திலேயே அந்த குழந்தையை விட்டுவிட்டு விமான நிலையத்தில் ஏறியுள்ளார் அந்த தாய். அதுவும் விமானம் புறப்படும்போதுதான், தனக்கு பிறந்த குழந்தை ஒன்று இருந்ததே என தேடியுள்ளவர், ஆத்தி குழந்தையை அங்கனயே விட்டுட்டோமே என்று நியாபகம் வந்து, விமானத்திலேயே அந்த கணமே, ‘என் குழந்தை.. என் குழந்தை’ என கத்தியுள்ளார். இதனை அறிந்த விமானி, அங்கிருந்து ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூமுக்கு தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் விமானம் மீண்டும் எங்கிருந்து புறப்பட்டதோ, அதே விமான நிலையத்துக்கு திரும்புவதற்கான அனுமதியை கோரியுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கடவுள் நம்மிடம் இருக்கிறார். எங்கள் பயணி ஒருவர் தன் குழந்தையை விமான நிலையத்தில் மறந்துவிட்டுவிட்டார். நாங்கள் திரும்பி வர இயலுமா? என்று கேட்கவும், கண்ட்ரோல் ரூமில் இருந்த அதிகாரியோ, உடனே அதிர்ச்சி அடைந்தும், ‘இது முற்றிலும் புதிதான ஒன்று... தாமதிக்காமல் உடனே திரும்புங்கள்’ என்று கூறியுள்ளார். உடனே விமானம் விமான நிலையத்துக்கு திரும்பிய பின்னர்தான் தாயும் சேயும் ஒன்று சேர்ந்தனர். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பயணியின் ஆரோக்கிய குறைபாட்டுக்காக மட்டுமே இதுபோன்று விமானங்கள் மீண்டும் தரையிறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

BABY, FLIGHT, BIZARRE, AIRPORT