"தடுப்பூசியே சந்தேகம்தான்... அப்படியே பயன்பாட்டுக்கு வந்தாலும்"... 'தடுப்பூசி குழுவின் தலைவர் பகிர்ந்த பகீர் தகவலால் பரபரப்பு!!!...
முகப்பு > செய்திகள் > உலகம்முதல் தலைமுறை கொரோனா தடுப்பூசிகள் குறித்து பிரிட்டன் தடுப்பூசி பணிக்குழு தலைவர் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.
மருத்துவ இதழான தி லான்செட்டில் பிரிட்டன் தடுப்பூசி பணிக்குழு தலைவர் எழுதியுள்ள கட்டுரையில் முதல் தலைமுறை தடுப்பூசிகள் முழுமையானதாக இல்லாமல் குறைபாடுகள் உள்ளதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு நம்மால் தடுப்பூசியை உருவாக்க முடியுமா என்பதே நிச்சயமற்றதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பல நிறுவனங்களும் பரபப்பாக உருவாக்கிவரும் தடுப்பூசிகள் எல்லா வயதினருக்கும் பயனளிக்குமா, நீண்ட காலம் பயனளிக்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், தற்போது தீவிரமாக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளில் நிறைய அல்லது அனைத்து தடுப்பூசிகளுமே தோல்வியடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சோதனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளால் அறிகுறிகளை குறைக்க முடியுமே தவிர, தொற்று பரவுவதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்