'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்?' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்பெய்ஜிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட வருபர்கள் எடையை பரிசோதித்துக்கொண்டு அதற்கு ஏற்பவே சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட வருபவர்கள் அவர்கள் எடையை பரிசோதித்துக்கொண்டு, உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அதற்கு ஏற்ப குறைவான கலோரி கொண்ட உணவுகளையே சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உணவகத்தின் மெனுவிலும் அதற்கேற்ப எடை குறைப்புக்கான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்துள்ளது.
முன்னதாக சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அந்நாட்டு பிரதமர் ஜி ஜின்பிங் உணவுகளை வீணாக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் காரணமாகவே இந்த உணவகம் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அப்படி அறிவித்தோம், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறி அந்த உணவகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மற்ற செய்திகள்