வாட்ஸ்-ஆப்பின் கோவத்துக்கு ஆளாகாதீங்க.. அப்புறம் உங்க கணக்கு அம்பேல்தான்.. இத படிங்க!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருக்கும் அதிகாரபூர்வமான வாட்ஸ் ஆப்  செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வாட்ஸ்-ஆப் நிறுவனம் கூறிவந்தது.

வாட்ஸ்-ஆப்பின் கோவத்துக்கு ஆளாகாதீங்க.. அப்புறம் உங்க கணக்கு அம்பேல்தான்.. இத படிங்க!

காரணம் வாட்ஸ்-ஆப் அப்டேட் கேட்கும்போது போலியான செயலிகள் பலரது மொபைலுக்கு தரவிறக்கம் ஆகிவிடுகின்றன. அவை போலியான செயலிகள் என தெரியாமலே நிறைய பயனாளர்கள் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றிலும் கூடுதலான வசதிகள் இருப்பதாலும், அவை பார்ப்பதற்கு வாட்ஸ்-ஆப் அப்ளிகேஷன் செயலிகள் போலவே இருப்பதனாலும் பலர் ஏமார்ந்து போய்விடுகின்றனர்.

ஆனால் பலர் அவை வாட்ஸ்-ஆப்பின் கிளை செயலிகள் அல்ல என்பது தெரிந்தே பயன்படுத்துகின்றனர். இதனால் தொடர்ந்து தனி நபர்களின் தகவல்களும் வீடியோ மற்றும் புகைப்படங்கள், ஆடியோக்கள் உள்ளிட்ட தரவுகளும் திருடப்படுவதை அவர்கள் அறிவதில்லை. இதனால் வாட்ஸ்-ஆப் நிறுவனம் இதுபோன்ற போலி செயலிகளை பயன்படுத்துபவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதோடு ஒரு அதிரடி நடவடிக்கையினையும் எடுத்துள்ளது.

அதன்படி, போலி வாட்ஸ்-ஆப் செயலிகளை பயன்படுத்தும் பயனாளிகளின் மொபைல் எண் தற்காலிகமாக தடை செய்யப்படும். அப்படி தடை செய்யப்பட்டால் அந்த மெசேஜ், போலி செயலிகளுக்கு வருவதோடு, உதவி தேவைப்பட்டால் தங்களை நாடலாம் எனவும் அவை கூறுகின்றன. ஆனால் அப்படி செய்வதனால் தொடர்ந்து வாட்ஸ்-ஆப்பில் இயங்கிவிடவும் முடியாது.

மீண்டும் அதிகாரப்பூர்வமான வாட்ஸ்-ஆப் செயலியை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, தொடர்ந்து வாட்ஸ்-ஆப்பில் இயங்குவது சாத்தியம். அதிலும் ஒரிஜினல் வாட்ஸ்-ஆப்பில் நமது வாட்ஸ்-ஆப் பயன்பாட்டுக்கான செல்போன் நம்பரைத் தந்தால், அது நம்முடைய பழைய வாட்ஸ்-ஆப் கணக்கை நமக்கு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

WHATSAPP, APPLICATION, BIZARRE, FAKE