‘இந்த பேங்க் கஸ்டமரா நீங்க’? அப்டின்னா டெபிட் கார்டே இல்லாம பணம் எடுக்கலாம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது பாரத் ஸ்டேட் வங்கி.
இந்த வங்கியில் டெபிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான மாற்று வழி, அதாவது டெபிட் கார்டு இல்லாமலே, பணம் எடுக்கும் சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குஷியாகியுள்ளனர்.
பொதுவாகவே ஒரு டெபிட் கார்டினை உடையாமல், தொலையாமல், கீறல் விழாமல் பராமரிப்பதும், எல்லாம் சரியாக இருந்தாலும் பின் நம்பரை மறக்காமல் இருப்பது உள்ளிட்ட பல வகையான சிக்கல்கள் இருக்கும். இவற்றையெல்லாம் தாண்டித்தான் பலரும் டெபிட் கார்டுகளை மெயிண்டெய்ன் செய்கின்றனர்.
ஆனால் பாரத் ஸ்டேட் வங்கி கடந்த 2017 -ம் ஆண்டு யோனோ (Yono App) என்கிற பெயரில் ஒரு புதிய டிஜிட்டல் பேங்கிங் சேவையை கொண்டுவந்தது. இது ஒரு செயலி வடிவத்தில் இருக்கும் சேவைதான். இதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், தங்களது எஸ்பிஐ கணக்கில் இருந்து, பணம் எடுப்பதற்கு டெபிட் கார்டினை பயன்படுத்த வேண்டியதில்லை என்றும், அவ்வாறு டெபிட் கார்டே இல்லாமல், பணம் எடுத்துக்கொள்ளும் வசதிதான் இந்த செயலி என்றும் கூறப்பட்டது.
இதற்கு முதலில் எஸ்பிஐ கணக்குதாரர்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து இந்த செயலியின் 6 இலக்க அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் பயனாளிரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் மெசேஜைக் கொண்டு உறுதி செய்த பிறகு, இந்த செயலியின் எண் மற்றும் பாஸ்வேர்டு இரண்டையும் பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ள முடியுமாம்.
ஏடிஎம் கார்டே தேவைப் படாத இந்த அரிய சேவையை எஸ்பிஐ இதுவரை இந்தியாவில் சுமார் 16,500 ஏ.டி.எம் மையங்களில் கொண்டுவள்ளதால் பலரும் இதனை வரவேற்றுள்ளனர்.