'பாலியல் தொந்தரவுண்ணு புகார் கொடுத்தா'...இத வச்சுக்கோங்க...ஸ்விகியின் செயலால் அதிர்ந்த பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக ஸ்விகி டெலிவரி பாய் மீது புகார் கொடுத்த பெண்ணிற்கு, ஸ்விகி நிறுவனம் எடுத்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பெங்களூருவை சேர்ந்தவர் நேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் ஸ்விகி ஆப் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார்.சிறிது நேரத்தில் ஆர்டர் செய்த உணவினை வழங்க வந்த ஸ்விகி டெலிவரி பாய்,நேகாவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேகா,உடனடியாக ஸ்விகியின் வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விளக்கி,சம்பந்த்தப்பட்ட அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் ஸ்விகி நடந்து கொண்ட விதம் தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.காரணம் புகார் அளித்த பெண்ணிற்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இழப்பீடாக அளித்துள்ளது ஸ்விகி நிறுவனம்.இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்,தனக்கு நடந்த அத்துமீறல் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது