"உங்களை இந்த நிலைமைக்கு தள்ளிட்டேன்".. உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு.. மனைவி எடுத்த விபரீத முடிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணவனுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

"உங்களை இந்த நிலைமைக்கு தள்ளிட்டேன்".. உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு.. மனைவி எடுத்த விபரீத முடிவு..!

Also Read | யாரை கேட்டு பப்பாளி செடிக்கு நீ வேலி போட்ட? சோகத்தில் முடிந்த குடும்ப தகராறு..

புதுமனை

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை எடுத்த நரியம்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் சுபஸ்ரீ என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வந்த இந்த தம்பதி நரியம்பாக்கத்தில் புரோக்கர் ஒருவர் மூலமாக வீட்டு மனை ஒன்றை நாலரை லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற சுபஸ்ரீ-ன் ஆலோசனைப்படி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் கடன் வாங்கி வீடு கட்டவும் துவங்கியுள்ளார் மோகன்.

இதனிடையே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் இது குறித்து உரிய ஆவணங்களுடன் 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் இந்த தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மோகன் மற்றும் சுபஸ்ரீ அதிர்ச்சியடைந்துள்ளனர். நீர் வழிப்பாதை என கட்டிடத்தை ஒரு வேலை இடிக்க சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சுபஸ்ரீ இருந்ததாக கூறப்படுகிறது.

Wife took sad decision after dispute over new house construction

விபரீதம்

இந்நிலையில் சுபஸ்ரீ நேற்று தங்களது புதிதாக கட்டப்படும் அந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் "உங்களை வீடு கட்டச் சொல்லி கடனாளி ஆக்கி விட்டேன்" என உருக்கமான கடிதம் ஒன்றினையும் சுபஸ்ரீ எழுதியதாக கூறப்படுகிறது. சுபஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மணிமங்கலம் காவல்துறையினர் உடனடியாக அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்நிலையில் சுபஸ்ரீயின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தாம்பரம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் சுபஸ்ரீ உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

கடனாளி ஆக்கி விட்டேன் என கணவனுக்கு கடிதம் எழுதிவிட்டு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Wife took sad decision after dispute over new house construction

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WIFE, WRONG DECISION, NEW HOUSE CONSTRUCTION, மனைவி, புதுமனை

மற்ற செய்திகள்