‘போர் என்பது வரிப்பணத்தில் தற்கொலை'.. கருத்துப் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் விடுவிக்கப்படுகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்றைய தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

‘போர் என்பது வரிப்பணத்தில் தற்கொலை'.. கருத்துப் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து!

இந்நிலையில் கவிஞரும் தமிழ்ப் பாடலாசிரியருமான வைரமுத்து, இந்தியா- பாகிஸ்தான் போர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் போர் என்பது வரிப்பணத்தில் தற்கொலை என்று அவர் கூறியுள்ளார்.  இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘அபிநந்தன் விடுதலைக்குப் பிறகு இருநாடுகளில் எந்த நாடு போர் தொடுக்கக் கருதினாலும், இரு நாடுகளுக்கும் இழப்புதான்’ என்று கூறியவர் அதனைத் தொடர்ந்து ‘போர் என்பது வரிப்பணத்தில் தற்கொலை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ‘போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்’ என்று இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியும் கருத்து பதிவிட்டிருந்தார்.

VAIRAMUTHU, INDIAPAKISTANWAR, ABHINANDANVARTHAMAN, AIRSURGICALSTRIKE