மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம்.. ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம்.. ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

மக்களவை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதேசமயம் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களைவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை எனவும் அறிவித்திருந்தார். இதற்கிடயே மக்கள் நீதி மய்யம் சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவர்களான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து கமல்ஹாசன் தனது கருத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,‘பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த சின்னம் பொருத்தமானது. இந்த பேட்டரி டார்ச் லைட் தமிழக மற்றும் இந்திய அரசியலுக்குள் ஒளி பாய்ச்சும்’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் மோதிரம் சின்னம் ஒதுக்க விசிக கோரியிருந்த நிலையில் அதனை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பது குறிப்படத்தக்கது.

KAMALHAASAN, MAKKALNEEDHIMAIAM, TORCHLIGHT, LOKSABHAELECTIONS2019