கடன் தொல்லையால் யூடியூப் வீடியோ பாத்து கள்ளநோட்டு அடித்த பட்டதாரி பெண்.. ஆனால்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூரில் 2000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண் ஒருவர் மாட்டிக்கொண்டதோடு, அவரை விசாரித்ததில் திடுக்கிடும் பின்னணிகள் தெரியவந்துள்ளன.

கடன் தொல்லையால் யூடியூப் வீடியோ பாத்து கள்ளநோட்டு அடித்த பட்டதாரி பெண்.. ஆனால்..!

கடலூரில் பரணி குமாரி என்கிற அந்த பெண்மணி, அங்குள்ள சாலையோர கடைகாரர் ஒருவரிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து மாற்ற முயன்றபோது, கடைகாரர் சந்தேகமடைந்து அப்பெண்ணை பற்றி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.  பின்னர் காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

விசாரணைக்கு பின், அப்பெண்ணிடம் இருந்து போலீசார் ரூ.69 லட்சத்து 700 மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். பொதுவாக கள்ள நோட்டினை ஆண்கள், அதுவும் அதற்கான சிறு அளவிளான தொழில்நுட்பங்களை கற்றுவைத்துக்கொண்ட ஆண்கள் அடிப்பது உண்டு.

ஆனால் அவர்களே போலீஸாரிடமும், வியாபாரிகளிடமும் எளிதில் பிடிபடும் நிலையில், இந்த பெண்மணி எப்படி இத்தனை லட்ச ரூபாய்க்கான கள்ளநோட்டுக்களை தயார் செய்தார்? அதுவும் எதற்காக என்றெல்லாம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போதுதான் மிகவும் எளிமையான முறையில் அப்பெண் சிக்கியுள்ளது தெரியவந்தது. காரணம் அப்பெண் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்தியது கலர் ஜெராக்ஸ் மெஷினைத்தான்.

இதற்கு காரணங்கள் கூறிய பரணி குமாரி, தனக்கு அதிக கடன் தொல்லைகள் இருப்பதால் அவற்றை சமாளிக்க வேறு வழி தெரியாமல் கலர் ஜெராக்ஸ் மெஷினில் கள்ள நோட்டுக்களை அடித்ததாகவும், யூ டியூப் வீடியோக்களை பார்த்துதான் தனக்கு இப்படி ஒரு ஐடியா கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். பரணி குமாரி அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்தவர். அவருக்கு ரூபிகா, சிவப்பிரியா என்று 2 மகள்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

FAKECURRENCY, BIZARRE, TAMILNADU