‘இங்க தனிச்சின்னம்.. அங்க உதயசூரியன் சின்னத்தில் என 2 தொகுதிகள்.. இது ராஜதந்திரம்’.. திருமா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பரபரப்பாக உள்ள நிலையில், தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொல்.திருமாவளவனின் தலைமையில் வழிநடத்தப்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆக, திமுக கூட்டணியின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ள இரண்டு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அதன்படி, திமுகவின் கூட்டணியில், விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்தில் திருமாவளவனும் , விழுப்புரம் தொகுதியில் உதய சூரியனுடனான கூட்டணியில் உதய சூரியனின் சின்னத்தில், விசிகவைச் சேர்ந்த ரவிக்குமாரும் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய திருமாவளவன், விழுப்புரம் தொகுதியை இழந்துவிடக்கூடாது என்பதால் ராஜதந்திர அடிப்படையில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிடுவதாக கூறிய அவர், அதே சமயம் விசிகவுக்கு தனி சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு, தங்களுக்கு 2 தொகுதிகள் வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக நிர்பந்திக்கவில்லை என்றும், தேர்தல் சின்னமானது வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.