இறங்கிய சிபிசிஐடி.. முக்கிய குற்றவாளி வீட்டில் முதற்கட்ட விசாரணை தொடக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் மற்றும் தகாத முறையில் வீடியோக்கள் எடுத்தது உள்ளிட்டவை அடங்கிய பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் சிபிசிஐடி அதிரடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இறங்கிய சிபிசிஐடி.. முக்கிய குற்றவாளி வீட்டில் முதற்கட்ட விசாரணை தொடக்கம்!

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பேசி, தங்கள் இடத்துக்கே வரவழைத்து, அவர்களை வற்புறுத்தியும் துன்புறுத்தியும் வீடியோ எடுத்து மிரட்டி, அதனை வைத்துக்கொண்டு மேலும் பாலியல் குற்றங்களைச் செய்துவந்த இளைஞர் கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரும் சிறையில் உள்ளனர். மேலும் இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு உடனே சிபிஐக்கு கைமாறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இடையில் சிபிசிஐடி விசாரணை மட்டும் நடத்த முடிவெடுத்து, சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி.நிஷா பார்த்திபன் ஆகியோர் பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணையைத் துவக்கியுள்ளனர். இதன் முதற் கட்டமாக குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு என்பவரது வீட்டில் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ARRESTPOLLACHIRAPISTS, POLLACHICASE, CBCID, CRIMEAGAINSTWOMEN