அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி.. அப்படி என்ன செய்தார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அண்மைக்கால நடவடிக்கைதான், இந்திய ராணுவ விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது. முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்த முடிவை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தபோது, இருநாடுகளுக்கும் இடையே போர் மூளுவதை விரும்பாததால் இத்தகைய முடிவை எடுப்பதாக அறிவித்திருந்தார்.
இதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக பேச்சு எழுந்தது. அப்போது அவர் அதனை பெறுவதில உடன்பாடில்லை என்று மறுதலித்துவிட்டார். ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு போட்டியில் ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமியான கிரேட்டா தன்பர்க் இடம்பெற்றுள்ளார்.பெருகி வரும் மோசமான பருவநிலை மாற்றங்கள் உலகை அழிவுக்குள்ளாக்கும் என்றும் உலகத் தலைவர்கள் எல்லாம் இதை கவனத்தில் கொண்டு உலகைக் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தனி ஆளாக போராடியவர் இளம் சிறுமியான கிரேட்டா தன்பர்க்.
கடந்த வருடம் தொடங்கி, வெள்ளி தோறும் பள்ளி செல்லாமல், பாராளுமன்றத்துக்குச் சென்று இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர். இந்தியாவில் இருந்து பல மாணவர்களின் ஆதரவைப் பெற்ற கிராட்டா, டைம்ஸ் இதழ் வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான இன்ப்ளூயன்ஸான நபர்களின் பெயர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றது.
இந்த சூழலில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனி நபர்களின் பெயர்களும், 85 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ள லிஸ்டில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கென நன்றி சொல்லி ட்வீட் சொல்லியிருக்கும் கிரேட்டா தன்பர்க் நோபல் பரிசு பெற்றால், 17 வயதில் நோபல் பரிசை பெற்ற மாலாலாவை விடவும் இவர்தான் இளையவர் என்ற பெருமையை பெறுவார். கிரேட் கிரேட்டா!
Honoured and very grateful for this nomination ❤️ https://t.co/axO4CAFXcz
— Greta Thunberg (@GretaThunberg) March 14, 2019