‘பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’.. காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி போலிஸார் சம்மன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

‘பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’.. காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி போலிஸார் சம்மன்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலமாக பழகி, 200 -க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, வசந்தக்குமார், சபரிநாதன், சதீஷ் ஆகிய நால்வரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்லூரி மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து இவர்கள் நால்வர் மீதும் குண்டர் சட்டம் சுமத்தப்பட்டது. மேலும் இவ்வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக கூறப்படும் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தினர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறப்படும் தினத்தில் தான் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை சந்திக்க சென்றாதாக திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலிஸார் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

POLLACHIISSUE, POLLACHICASE, CBCID