ஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது.

ஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!

வண்ணங்கள் பலவற்றை ஏற்றத் தாழ்வின்றி ஒருவருக்கொருவர் பூசியும் வீசியும் குடிமக்கள் எல்லாம் ஒன்றாய் சேர, ஒரு கலாச்சார விழாவாகவும் கலர்சார்ந்த விழாவாகவும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் பரவலாகவும் தென் மாநிலங்களில் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

எனினும் சென்னை போன்ற மெட்ரோ மாநகரங்களில் ஹோலி பண்டிகை களைகட்டியது. மக்கள் பலரும் வண்ண மழைகளில் நனைந்து, உற்சாகத்துடன் ஹோலியை வரவேற்று கொண்டாடினர். உண்மையில் இதுபோன்ற பண்டிகைகளின்போதுதான், மனிதர்களின் உன்னதமும் மாண்பும் புரியவரும் என்பதற்கிணங்க ஒரு அரிய நிகழ்வு நடந்தேறியுள்ளது.

சென்னையில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை வேப்பேரி பகுதியில் ஹோலி பண்டிகை களை கட்டியிருந்த வேளை அது. ஆனால் அந்த பண்டிகையில் மகிழ்ச்சியாக இருந்த யாரும், அந்த மகிழ்ச்சிக் களத்தில் இருந்த சிறுவன் ஒருவன் திடீரென தண்ணீர் நிரப்பப்பட்ட கலனுக்குள் விழுந்து தத்தளிப்பான் என எதிர்பார்க்கவில்லை.

ஆம், அப்படி ஒரு சோகம் நிகழ்ந்ததும் என்ன செய்வதென்று அனைவரும் தவித்த நிலையில், அங்கிருந்த ரீயூடர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் போட்டோகிராபர் ரவி என்பவர் அச்சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார். களத்தில் நின்று பத்திரிகை செய்திக்கான புகைப்படத்தையும் செய்தியையும் மட்டும் சேகரிக்காமல், மனிதத்தின் மாண்புகளையும் கவனிக்கும் மனம் படைத்த இந்த பத்திரிகை புகைப்படக்காரர், தான் பாராட்டப் படுவதோடு, அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்.

HOLI2019, COLORS, FESTIVAL, INDIA, CHENNAI, BIZARRE