Connect : “பேய் ஒரு காட்டு காட்டிட்டு தான் போகும்”.. மிரட்டும் எக்ஸார்சிஸம் கான்செப்ட்.. நயன்தாராவின் ‘கனெக்ட்’ பட டிரெய்லர் சொல்லும் கதை என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா', நயன்தாராவின் 50வது படமாகும். பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘இறவாக்காலம்’, அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் ஆகிய படங்களை அஸ்வின் சரவணன் இயக்கினார்.
இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படத்தை அஸ்வின் சரவணன், இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22.12.2022 அன்று இடைவேளை இல்லாத திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லர்படி, கணவர், குழந்தை, அப்பா என வாழும் நயன்தாராவின் வளரிளம் பருவ மகள் சுட்டியாகவும் திறமையாகவும் இருக்கிறார். திடீரென ஒருநாள் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. இதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். ஆனால் அவரவர் தத்தம் பணிகளை போனில் தொடர்கின்றனர். அப்படி அனைவரும் கான்ஃபரன்ஸ் காலில் இணையும் போது நயன்தாராவின் வீட்டில் இருந்து கூடுதலாக ஒரு நபரின் சத்தம் கேட்பதாக நண்பர்கள் கூற, அதன் பிறகு நயனின் மகள் அம்மு எனும் பெயர் கொண்ட கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் வித்தியாசமாக நடந்துகொள்வதை நயன் உணர்கிறார்.
அப்போது சத்யராஜ், “உன்னுடன் இருப்பது நம்ம அம்முவே இல்ல.. நீ அவளுடன் இருப்பது ஆபத்துமா” என அழுதுகொண்டே சொல்கிறார். கடைசியாக அம்முவின் உடலில் பேய் இருப்பது போல் காட்டப்பட, அப்போதுதான் அனுபம் கெர் (பாலிவுட் நடிகர்) ஒரு கிறிஸ்துவ பாதிரியாராக வருகிறார்.
அவர் எக்ஸார்சிஸம் பண்ணிதான் குணப்படுத்த வேண்டும் என்கிறார். அதாவது பேயை விரட்டுவதற்கு பிரபல ஆங்கில படங்களில் காட்டப்படும் எக்ஸார்சிஸம் கான்செப்ட்டை தான் அவர் சொல்கிறார். ஹாரராகவும், த்ரில்லராகவும் வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரெய்லரை பார்க்கும்போது ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆவல் உண்டாவதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | மாண்டஸ் புயல்: இந்த நேரத்துல மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது.. போக்குவரத்து கழகம் தகவல்..!
மற்ற செய்திகள்