'அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'.. 'காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்'... 'வெளியான பகீர் காரணம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாமக்கல்லில் இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த காதல் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

'அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'.. 'காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்'... 'வெளியான பகீர் காரணம்!'...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வசித்து வரும் தம்பதி மணிகண்டன் (28) - ஆனந்தி (26). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மோகன்குமார் (7) என்ற மகனும், சித்திகா ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இந்த சூழலில் மணிகண்டன் தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்தபோது, கடந்த சில வாரங்களாக ஆனந்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனுக்கு அவருடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என அவரை கண்டித்ததாகவும், அதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட, தம்பதி நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தங்களை பிரித்து வைக்கும்படி மனு அளிக்க, போலீசார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் படி தெரிவித்ததை அடுத்து கணவன் - மனைவி இருவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அங்கு கிடந்த பாறாங்கல்லை எடுத்து ஆனந்தியின் தலையில் போட, அதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறி, வலியால் அலறிய ஆனந்தி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வர, அதைப் பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட அங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மணிகண்டன் தன்னுடைய மனைவி ஆனந்தியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆனந்தியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்