‘நான் 2 பொண்ணுக்கு அப்பன்..பெத்தவங்களுக்கு பதறுதே.. உங்களுக்கு?’.. தமிழக அரசுக்கு கமல் சரமாரி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்த அதிரடியான சில கேள்விகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘நான் 2 பொண்ணுக்கு அப்பன்..பெத்தவங்களுக்கு பதறுதே.. உங்களுக்கு?’.. தமிழக அரசுக்கு கமல் சரமாரி!

அதில், புகார் கொடுத்த பெண்ணின் பெயர்களை தமிழக அரசாணை வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கமல், பாதிக்கப்பட்ட மேலும் பிற பெண்கள் புகாரளிக்க வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அந்த பெண்ணின் அழுகைக் குரலைக் கேட்டதில் இருந்து மனம் பதறுவதாகவும், நண்பன் என்று சொல்லி அந்த 18 வயது மதிக்கத்தக்க பெண்ணை அழைத்துவந்து இவர்கள் செய்த கொடுஞ்செயலில், அந்த பெண்ணின் அழுகை, பயம், அதிர்ச்சி எல்லாமே பதறவைப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த விவாகரத்தில் கொதித்து எழுந்து, போராட்டம் நடத்த வந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தப்படுகின்றனர்,
பெண்ணின் பெயரில் ஆட்சியை நடத்துவதாக கூறும் ஆட்சியாளர்கள் யாரும் தங்களது ஆட்சியில் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய கமல்ஹாசன், பொள்ளாச்சி கொடூரச் சம்பவத்திற்கு தமிழக முதல்வராக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? என்று நேரடியாக கேள்வி கேட்டுள்ளார். நீதி கேட்டு போராட்டம் நடத்தும் பெண்களை போலீசை விட்டு அடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள கமல்ஹாசன், ‘பெண்களிடம் முறைதவறி நடக்கும் காவல்துறையா எங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறது?’ என்றும் கேட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இருக்கவில்லை என்று கூறிய கமல், இந்த சம்பவத்தால் பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே; உங்களுக்கு பதறவில்லையா? என்றும், ‘பெண்களின் தந்தையாக கேட்கிறேன்.. என்ன செய்து அரசின் தவறுக்கு பரிகாரம் செய்யப்போகிறீர்கள்’ என்றும் சரமாரியாகக் கேட்டுள்ளார்.

EDAPPADIKPALANISWAMI, POLLACHICASE, KAMALHAASAN, VIRALVIDEO