கள்ளக்காதல் குற்றங்கள் பெருக டிவி சீரியல்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்காதலை ஒரு கிரிமினில குற்றமாக கருதமுடியாது என கடந்த வருடம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்காதல் குற்றங்கள் பெருக டிவி சீரியல்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி!

கடந்த 2017-ஆம் ஆண்டு கள்ளக்காதலால் கொல்லப்பட்ட வில்லிவாக்கம் ரஞ்சித்,  விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட அஜித் குமார் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த அஜித்தின் வழக்கினை விசாரித்த கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய நீதிமன்ற அமர்வு, கள்ளக்காதல் குற்றங்களில் ஆந்திரா முதலிடத்தில் இருப்பதாக வேதனை தெரிவித்ததோடு, இதுகுறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர்.

மேலும், திருமண பந்தத்தைத் தாண்டிய தகாத உறவுகள் சமூகத்தில் பெரும் சிக்கல்களை விளைவிப்பதாகவும் கருத்து கூறினர். ஆனால் கள்ளக்காதலின் விளைவால் உண்டாகும் குற்றச்செயல்களும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பின் நோக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

எனினும் இந்த நீதிமன்ற அமர்வு சில கேள்விகளையும் எழுப்பியது. அதன்படி, கள்ளக்காதல் அதிகரிக்க டிவி சீரியல்களும் திரைப்படங்களும்தான் காரணமா என்கிற சந்தேகக் கேள்வியினை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளிடம் எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கள்ளக்காதலுக்காக வாழ்க்கைத் துணையை எப்படியெல்லாம் தீர்த்துக்கட்டலாம்? கூலிப்படைகளைக் கொண்டு எப்படி இதைச் செய்யலாம்? என்பது போன்று காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா ? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மேலும், பாலியல் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் காரணமாக கள்ளக்காதல்கள் வைத்துக்கொள்ளப் படுகின்றனவா? என்றும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக வரும் ஜூன் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

MADRASHIGHCOURT, TV SERIALS