'12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும் எனவும், சில இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்