1 மணி நேரத்துக்கு 5 ரூபாய்.. சென்னைக்கு வரவிருக்கும் வாடகை சைக்கிள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக வாடகை சைக்கிள் திட்டம் வர உள்ளது.

1 மணி நேரத்துக்கு 5 ரூபாய்.. சென்னைக்கு வரவிருக்கும் வாடகை சைக்கிள்!

கடந்த ஜனவரி மாதம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை அரசு செயல்படுத்த முடிவுசெய்தது. இதற்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் ஏற்கனவே ஹைதராபாத், டெல்லி, அமராவதி உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக அண்ணாநகர், பெசன்ட் நகர், மெரினா கடற்கரை ஆகிய மூன்று இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 250 சைக்கிள்களும், சைக்கிள் நிறுத்தங்களும், கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்ட்ரல், மெரினா, பெசன்ட் நகர், அடையாறு, அண்ணாநகர் உட்பட சென்னை முழுவதும் சுமார் 375 சைக்கிள் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சைக்கிள் வடிவமைப்பின்படி ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சைக்கிள்களிலும் எல்.இ.டி விளக்கு மற்றும் வேகமாக ஓட்டுவதற்கு வசதியாக மூன்று கியர்கள் உள்ளன.

சைக்கிள் எடுக்க விரும்புபவர் 1 மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் சைக்கிளை திருட முடியாது. மேலும் சென்னையில் உள்ள எந்த நிறுத்தத்தில் வேண்டுமானும் சைக்கிளை நிறுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMILNADU, CYCLE, TNGOVT