'ஆமா, எனக்கு விவாகரத்து ஆனது உண்மை தான்'... 'அது 'பிரபா'க்கு தெரியும்'... 'அவளை மிரட்டி தான் சொல்ல வச்சு இருக்காங்க' ... பதறும் இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டதாக அவரின் கணவர் கூறிய நிலையில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளைஞர் கார்த்திகேயன். இவரும் திருச்சியைச் சேர்ந்த தமிழினி பிரபா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறதது. இதையடுத்து கோவையில் கடந்த 5-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கார்த்திகேயனின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், அவர்கள் வீட்டில் இருவரும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரைத் தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்றனர். இந்த காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தமிழினி பிரபாவை மீட்கத் திருச்சி சென்றார்கள். அப்போது வழக்கில் அதிரடி திருப்பமாக, என்னை யாரும் கடத்தவில்லை என்றும், எனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளார், எனவே 2 நாட்களில் ஊருக்குத் திரும்பி விடுவதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்தச்சூழ்நிலையில் கார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் எனது மனைவி கடத்தப்பட்டுள்ளார். அவர் ஆணவக் கொலை செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே எனது மனைவியைக் கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கார்த்திகேயன். ''எனது வீட்டிலிருந்த தமிழினி பிரபாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எனது தாயைத் தாக்கிவிட்டுக் கடத்தி சென்றார்கள்.
இதுதொடர்பாக பதிவான வீடியோவை துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளேன். எனக்குக் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது உண்மை தான். ஆனால் எனக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2015ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டேன். எனக்குத் திருமணம் ஆனது மற்றும் விவாகரத்து ஆனது எல்லாம் தமிழினி பிரபாவிடம் ஏற்கனவே தெரிவித்து உள்ளேன்'' எனக் கூறினார். தற்போது கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்