பல கோடி மதிப்பிலான சிவப்பு சந்தன மரங்கள் பறிமுதல்! அதிர்ச்சியளிக்கும் பிண்ணனி தகவல்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்
ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து சிவப்பு சந்தன மரக் கட்டைகள் சில மாதங்களாகவே கடத்துப்பட்டு வருகிறது. மேலும், மார்ச் மாதத்தில் மட்டும் பல கோடிகள் மதிப்பிலான சிவப்பு சந்தன மரங்கள் கடத்துப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,இன்று சென்னையில் கஸ்டமஸ் அதிகாரிகளால் 9 கோடி மதிப்பிலான 18 டன் சிவப்பு சந்தன மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு இந்த க சம்மந்தம் உள்ளது என்ற திடுக்கிடும் உண்மைகளை சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் புகைப்படம் காண : https://twitter.com/ANI/status/1111627077663510530
இந்நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.