'அன்புமணி கிட்ட அப்படி என்ன கேட்டாரு'?....கேள்வி கேட்ட தொண்டரின் நிலை...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டரை அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வாயிலேயே அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சியினரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.அன்றைய தினமே 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
இதனிடையே அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்திலிருந்த அதிமுக தொண்டர் ஒருவர், அன்புமணி ராமதாஸை பார்த்து 5 வருடங்களாக எங்கே போனீர்கள்,இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்டார்.இதனை சற்றும் எதிர்பாராத முன்னாள் அமைச்சர் செம்மலை,கேள்வி கேட்ட தொண்டரின் வாயில் அடித்தார்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Here's another angle to it.. @AIADMKOfficial cadre actually gets slapped by @AIADMKOfficial MLA Semmalai repeatedly for questioning @draramadoss..
And @draramadoss dutifully continues his campaign instead of intervening..
Long live Democracy..🙊🙊 pic.twitter.com/a0ravyvHi4 — Pramod Madhav (@madhavpramod1) April 1, 2019
Ahem - @AIADMKOfficial cadre attacked allegedly by #PMK cadres as he opposed @draramadoss..
He is from Omalur, Salem..@CMOTamilNadu and @OfficeOfOPS good job.. 👏🏼👏🏼👏🏼(Slow claps)
(#jayalalithaa entire State feels sorry for your party)
Also, @draramadoss didn’t stop talking.. pic.twitter.com/pjGTD2cUlv — Pramod Madhav (@madhavpramod1) March 31, 2019