‘பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது’: ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும் மற்றும் திமுகவைச் சேர்ந்தவருமான ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

‘பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது’: ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இதுபற்றி திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையின்படி, நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுக-விலிருந்து நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் குறிப்பிடும்போது, ‘பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், நடிகை பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் கூறிய ராதாரவி, திமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து பேசும்போது தன்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

MKSTALIN, DMK, RADHARAVI, CONTROVERSY