'நான் அவரோடு போட்டி போடல'...'எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாக்காதீங்க'...மனம் திறந்த வீரர்!
முகப்பு > செய்திகள் > தமிழ்நான் அவருடைய போட்டியாளர் இல்லை,என்னையும் அவரையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என,ரிஷப் பண்ட் குறித்து இந்திய வீரர் விர்த்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் அணியில் எந்தந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதனிடையே காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் விக்கெட் கீப்பர் விர்த்திமான் சஹா இதுகுறித்து பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறும்போது ''தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தனது முழு திறனையும் வெளிப்படுத்தி விட்டார் ரிஷப் பண்ட்.அவரது வெற்றியை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வளவு சிறிய வயதில் இது போன்று பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.அந்த இரண்டையும் எளிதாக கையாள்கிறார் பண்ட்.காயம் காரணமாக என்னுடைய வாய்ப்பை இழந்த நிலையில் அந்த இடத்தில் பண்ட் வந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.
34 வயதான நான் இவர் போன்ற இளம் வயது வீரர்களை பாராட்டுவது எந்த தவறும் இல்லை.காயத்திலிருந்து மீண்டு நான் அணியில் இடம் பெறுவேனா என்பது எனக்கு தெரியவில்லை.தற்போது ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை போட்டிகள் அணிவகுத்து நிற்கின்றன.எனவே அதுகுறித்த கேள்வி தற்போது எழவில்லை.எனவே ரிஷப் பண்டை என்னுடைய போட்டியாளராக நான் பார்க்கவில்லை என விர்த்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விர்த்திமான் சஹா ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது.