'இப்படி தான் எல்லா மேட்ச்லையும் நடக்குது'...இனிமேல் பொறுக்க முடியாது...செம டென்ஷனில் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

மொகாலியில் நேற்று இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய  ஒருநாள் போட்டியில்,ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படு மோசமாக இருந்தது.மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எளிதான பல வாய்ப்புகளை தவறவிட்டது,கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

'இப்படி தான் எல்லா மேட்ச்லையும் நடக்குது'...இனிமேல் பொறுக்க முடியாது...செம டென்ஷனில் கேப்டன்!

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டிஆர்எஸ் முறையில் கொடுக்கப்பட்ட விக்கெட் தற்போது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும் போது, 44 -வது ஓவரில் டர்னர் 41 ரன்களில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, டர்னர் பேட்டின் விளிம்பில் பந்து பட்டு, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக இந்தியா அணி சார்பில் அப்பில் செய்யப்பட்டது.அப்போது முதல் அம்பயர் நாட் அவுட் கொடுக்கவே, இந்தியா அணி டிஆர்எஸ் கேட்டது.

அப்போது ஸ்னிக்கோ மீட்டரில்,பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால், முதல் அம்பயரின் முடிவை மாற்றாமல் நாட் அவுட் என்றே மூன்றாம் அம்பயரும் முடிவு வழங்கினார்.இந்த விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி 'இது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை.

ஒவ்வோரு போட்டியிலும் இந்த டிஆர்எஸ் முடிவு ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிவிடுகிறது.இதற்கு மேலும் இதுபோன்ற சர்ச்சைகளை பொறுத்துக்கொள்ள முடியாது.மேலும் டர்னருக்கு நாட் அவுட் வழங்கப்பட்டதே இந்த போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது' என கூறினார்.

VIRATKOHLI, CRICKET, BCCI, DRS, INDIAVSAUSTRALIA