'முக்கியமானதையே மறந்துட்டு போனா எப்படி'?...பிரபல வீரரின் 'அல்டிமேட் மறதி'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

விளையாட வரும் போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் க்ளவுஸை மறந்துவிட்டு வந்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'முக்கியமானதையே மறந்துட்டு போனா எப்படி'?...பிரபல வீரரின் 'அல்டிமேட் மறதி'...வைரலாகும் வீடியோ!

'ப்ரைன் ஃபேட்' என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதியது ஒன்றும் அல்ல.ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியின் போது தான் டிம் பெய்ன் தனது  க்ளவுஸை மறந்துவிட்டு சென்றார்.மைதானத்திற்குள் வந்த பின்பு தான்,க்ளவுஸை மறந்தது நியாபகத்திற்கு வர,உடனே பெவிலியனை நோக்கி சென்று,சக வீரரை எடுத்து வர செய்து பின்பு அணிந்து கொண்டு மைதானத்திற்குள் சென்றார்.இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

வர்ணனையாளர்கள் இதுபோன்ற நிகழ்வை கண்டதில்லை என கிண்டலடித்தனர்.ஆனால் இதே போன்ற நிகழ்வு கடந்த மார்ச் 2017ம் ஆண்டு நடைபெற்றது. ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஃபவத் அகமது பேட்டை மறந்து வைத்துவிட்டு ஆடவந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.

CRICKET, TIM PAINE, BRAIN FADE, AUSTRALIA, CRICKET AUSTRALIA, GLOVE