'உலகக்கோப்பையில் 4-வது வீரரா இறங்க போறது'...இவங்க ரெண்டு பேருல யாரு?...ஜாம்பவான்களின் பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

உலகக்கோப்பை போட்டிகள் மே 30ம் தேதி இங்கிலாந்தில் துவங்க இருக்கிறது.ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பிடிப்பார்கள் என்று.அதிலும் குறிப்பாக  எந்த வீரர் எந்த ஆடரில் இறங்குவார் என்பதும் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.ரசிகர்களும் இதுகுறித்த தங்களின் விவாதங்களை ட்விட்டரில் துவங்கி விட்டார்கள்.

'உலகக்கோப்பையில் 4-வது வீரரா இறங்க போறது'...இவங்க ரெண்டு பேருல யாரு?...ஜாம்பவான்களின் பதில்!

இதனிடையே இந்திய அணியின் நான்காவது வீரராக யார் இறங்கினால் நன்றாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்,மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.டெல்லி கேப்பிட்டல் அணியின் பேட்டிங் ஆலோசகராக இருக்கும் பாண்டிங் கூறுகையில் 'இளம் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்தான் நான்காவது வீரர் இடத்துக்கு தகுதியானவர்.மேலும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி தனது முழு திறனை வெளிப்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மற்றொரு பேட்டிங் ஆலோசகருமான சவுரவ் கங்குலி பேசுகையில் ''என்னுடைய சாய்ஸாக இருப்பவர் புஜாரா தான்.அதற்கு காரணம் புஜாராவின் சமீபத்திய ஃபார்ம்.நான் கேப்டனாக இருந்த போது ட்ராவிட் அணிக்கு அளித்த பங்களிப்பை புஜாரா அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.மேலும் அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு சிறந்த தேர்வாக இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

CRICKET, SOURAVGANGULY, IPL2019, IPL, RISHABH PANT, WORLD CUP 2019, RICKY PONTING, PUJARA