'மோடியை ஏன் கட்டி புடிச்சேன்'... 'ராகுல் ஜி ரொம்ப கூல்'...'செல்ஃபி'...தெறிக்க விட்ட ராகுல்!
முகப்பு > செய்திகள் > தமிழ்தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார்.சென்னையின் புகழ் மிக்க பெண்கள் கல்லூரியான ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார்.
தன்னிடம் எளிமையான கேள்விகளை கேட்க வேண்டாம்,கடினமான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என கூறி,தனது உரையை ராகுல் காந்தி ஆரம்பித்தார்.அப்போது கேள்வி கேட்க ஆரம்பித்த மாணவி ஒருவர் 'ஹாய் சார்' என கூறிக்கொண்டு தனது பேச்சினை ஆரம்பித்தார்.அப்போது குறுக்கிட்ட ராகுல், ‘என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க' என்றார். உடனே அந்த மாணவியும், ‘ஹாய் ராகுல்' என்றார்.இதை கேட்ட மொத்த மாணவியர் கூட்டமும் கரகோஷம் எழுப்ப அரங்கமே அதிர்ந்தது.
மேலும் மாணவிகள் கேட்ட பல சுவாரசியமான கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார்.அப்போது மாணவி ஒருவர் மோடியை ஏன் நாடாளுமன்றத்தில் கட்டிப்பிடித்தீர்கள் என கேட்க 'புன்முறுவலுடன் பதிலளித்த ராகுல்' ''அன்று பிரதமர் மோடி, என்னைப் பற்றியும், எனது அப்பா, எனது பாட்டி என எல்லோர் பற்றியும் கடுமையாக பேசிக்கொண்டிருந்தார்.காங்கிரஸ் கட்சியால் இந்த நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என விமர்சித்தார்.நான் அமைதியாக தான் இருந்தேன்.ஆனால் அவர் என் மீது கடுமையான வெறுப்பை காட்டி கொண்டிருந்தார்.
யாருக்கு அன்பு கிடைக்கவில்லையோ அவர்கள்தான் அடுத்தவர் மீது வெறுப்பை காட்டுவார்கள்.பிரதமர் மோடிக்கு ஏனோ கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காமல் போய்விட்டது.அதனால் அவருக்கு அன்பை கொடுக்க எண்ணி அவரை கட்டி பிடித்தேன் என கூறினார்.ராகுலின் பதிலை கேட்ட அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.
மாணவிகளோடு உரையாடலை முடித்த ராகுல் பின்பு மாணவிகளுடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.ராகுலின் வருகை குறித்து பேசிய மாணவிகள் ''ராகுல் எங்களுடன் இந்த அளவிற்கு உரையாடுவார் என நாங்கள் நினைக்கவில்லை.அவர் மிகவும் எளிமையுடன் நடந்து கொண்டார் என மாணவிகள் தெரிவித்தார்கள்.
Students of Stella Maris College were really excited to meet and interact with Congress President @RahulGandhi today ! #VanakkamRahulGandhi pic.twitter.com/vjdrH4sHOs
— Saral Patel (@SaralPatel) March 13, 2019