'சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பெற்றோர்'...குழந்தைகளுக்கும் இப்படியா?...கடுப்பான பள்ளி!
முகப்பு > செய்திகள் > தமிழ்வீட்டிலிருந்து சாப்பாடு கொடுத்து விடாமல்,ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ மாணவிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்தால் அதை பள்ளி நிர்வாகம் ஏற்று கொள்ளாது என,சென்னையில் உள்ள பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் தற்போது அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறது.மூன்று வேளை உணவு முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தும் தற்போது வீடு தேடி வரும் நிலையில் இன்றைய ஆன்லைன் வர்த்தகம் விரிந்துள்ளது.தற்போது ஹோட்டல்களில் சென்று உணவு உண்பதை தவிர்த்து,ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப்களில் அதிகமான சலுகைகள் வழங்கப்படுவதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்கின்றனர்.
பொதுவாக வேலைக்கு செல்லும் இளைஞர்களும்,இளம்பெண்களும் மதிய உணவிற்கு ஸ்விகி போன்ற ஃபுட் டெலிவரி ஆப்களையே நம்பி உள்ளனர்.இந்நிலையில் டெலிவரி ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோரே உணவு ஆர்டர் செய்யும் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.இதனை தடுக்கும் விதமாக ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கொண்டுவரப்படும் உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்படும் எனத் தனியார் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தத் தனியார் பள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்விகி உள்ளிட்ட ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ- மாணவிகளுக்கு உணவு கொண்டுவரப்படுவதாக தகவல் வந்துள்ளது. இனிமேல் அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் அந்த உணவு அப்படியே திருப்பி அனுப்பப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.