'நீங்க ஐபிஎல் நடத்துங்க,நடத்தாம போங்க'...முக்கிய முடிவை வெளியிட்ட பாகிஸ்தான்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில்,ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் ஒளிபரப்ப மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

'நீங்க ஐபிஎல் நடத்துங்க,நடத்தாம போங்க'...முக்கிய முடிவை வெளியிட்ட பாகிஸ்தான்!

ஐபிஎல் போட்டியின் 12-வது சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத இருக்கின்றன.உலகமெங்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் ஒளிபரப்ப மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் அகமது சவுத்ரி ''நாங்கள் எப்போதுமே விளையாட்டையும் அரசியலையும் தொடர்பு படுத்தியது இல்லை.ஆனால் இந்தியா தொடர்ந்து அந்த தவறை செய்து வருகிறது.புல்வாமா தாக்குதலை காரணம் காட்டி,அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை டி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யவில்லை.அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் நேரம் தான் இது.அது மட்டுமல்லாமல் இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது மிகப் பெரிய விதிமீறல்.ஆனால் ஐசிசி இந்திய அணி மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நாங்கள் பல்வேறு புகார்கள் அளித்தும் ஐசிசி,அதனை ஒரு பொருட்டாக மதிக்காதது மிகவும் துரதிஷ்டவசமானதாகும்.நாங்கள் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்துவதால் இந்திய அணிக்கும் ஐபிஎல் அமைப்புக்கும் தான் நஷ்டம் ஏற்படுமே தவிர எங்களுக்கு அல்ல''என அமைச்சர் சவுத்ரி தெரிவித்தார்.