'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை அழைத்து வர இந்தியா வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்!

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்தியாவின் மிக் ரக விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன் விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதனால் பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன்,பாகிஸ்தானில் தரையிறங்கினார்.இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் அந்தநாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றார். பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை கைது செய்த தகவல் அறிந்ததும், அவரை பத்திரமாக மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.

இந்நிலையில் அமைதி நடவடிக்கையாக அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.இதனைத்தொடர்ந்து விமானம் மூலம் அவரை அழைத்துவர இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்தது. இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி அபிநந்தனை அழைத்து வரவும் முடிவு செய்தது.ஆனால் இந்திய அரசின் இந்த கோரிக்கையினை மறுத்த பாகிஸ்தான் அரசு,பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானம் பறக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து விட்டது.

அபிநந்தனை அடாரி-வாகா எல்லைவழியாக மட்டுமே அனுப்ப முடியும் என பாகிஸ்தான் தீர்க்கமாக தெரிவித்துவிட்டது.இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அடாரி-வாகா எல்லை வழியாக அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.