'நாம ஒரு பக்கம் வண்டிய திருப்புனா,அது வேற பக்கமா போகுதே'...இதுக்கா இவ்வளவு செலவு செஞ்சோம்!
முகப்பு > செய்திகள் > தமிழ்இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டதை தொடர்ந்து,அதனை வழங்கிவிட்டதாக வழங்கி விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி நேற்று தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும்,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்து ஆகியிருந்தது.இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்வதால், அந்த நாட்டுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.இதனால் கடும் கோபம் அடைந்த பாகிஸ்தான்,இரு நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறாததால் எங்களுக்கு ரூ.481இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு தரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், தீர்ப்பாய கமிட்டியில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த அந்த கமிட்டி,பாகிஸ்தானின் புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்தது.மேலும் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட செலவுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி வழங்க வேண்டிய இழப்பீடு தொகையான .ரூ 11 கோடியினை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கி விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தெரிவித்துள்ளது.