'பாகிஸ்தான் கூட விளையாடம இருந்தா'...அது 'காலில் விழுவதை விட கேவலம்'...கொந்தளித்த பிரபலம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன்,இந்தியா விளையாடாமல் தவிர்ப்பது காலில் விழுவதை விட கேவலமானது என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பாகிஸ்தான் கூட விளையாடம இருந்தா'...அது 'காலில் விழுவதை விட கேவலம்'...கொந்தளித்த பிரபலம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய கோழைத்தனமான தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிறகு,பாகிஸ்தானுடன் அனைத்து தொடர்புகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடுமையாக எழுந்தது.இதனால் மத்திய அரசு பாகிஸ்தானுடன் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விதமான தொடர்புகளையும்,தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிகள் வரவிருக்கும் நிலையில் அதில் இந்தியா,பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் இது குறித்த அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு தான் எடுக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.இதனால் மத்திய அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.அவர் தனது பதிவில் ''“1999 கார்கில் போரின்போதே உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடியது. வெற்றியும் பெற்றது. பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியா இழப்பது வெறும் 2 புள்ளிகள் மட்டுமல்ல. போட்டியில் விளையாடமல் தவிர்ப்பது சரணடைவதைவிட மோசமானது” என தெரிவித்தார்.

மேலும், “40 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு மத்திய அரசு தேசிய துக்க தினமாகக்கூட அனுசரிக்கவில்லை. ஆனால், 3 மாதங்களுக்குப் பின் நடைபெற இருக்கும் போட்டிக்கு தடையா?. பாஜக இந்த விவகாரத்தை திசைதிருப்பவே முயற்சிக்கிறது. எங்களுக்கு சைகை அரசியல் தேவையில்லை, சரியான நடவடிக்கையே தேவை,” என சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.