'பேசும் போது ரொம்ப எமோஷனல் ஆன 'தல'...கேப்டன் கூல் 'தோனி ஏன் அழுதார்'?...வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கும்,சென்னைக்கும் ஒரு வித பந்தம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.இந்த காரணத்தினால் தானோ என்னவோ மற்ற அணியினை காட்டிலும் சென்னை அணி சற்று வித்தியாசப்பட்டு நிற்கிறது.இந்த அனைத்து விஷயங்களையும் பேசும் விதத்தில் அமைந்துள்ள டாக்குமெண்ட்ரி தான் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கும். ''Roar of the Lion''
ஐபிஎல் தொடருக்காக ஹாட் ஸ்டார் தளத்தில் 5 எபிசோட்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய மொத்த கதையையும் தோனி விளக்கியுள்ளார்.கபீர் கான் இயக்கியுள்ள இந்த டாக்குமெண்ட்ரியில் தோனி சந்தித்த சவால்கள் மற்றும் சறுக்கல்கள் என அனைத்தையும் மனம் திறந்து பேசியுள்ளார்.குறிப்பாக சிஎஸ்கே இரண்டு வருடம் தடை செய்யப்பட்டது,மூன்றாவது முறையாக கோப்பையினை வென்றது,அணி மீதான குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் பேசியுள்ளார்.
முதல் எபிசோடில்,அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த போதும்,சென்னை அணிக்கு ஆதரவு அளித்து நின்ற ரசிகர்களுக்காக கோப்பையினை வென்றதாக தோனி குறிப்பிட்டுள்ளார்.என்னுடைய அணியினை நான் தேர்ந்தெடுக்கவில்லை எனவும்,அணி தான் தன்னை தேர்ந்தெடுத்ததாக தோனி தெரிவித்தார்.மேலும் கடந்த 2013ம் ஆண்டு தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் மிக கடினமான காலம் என குறிப்பிடும் தோனி,சிஎஸ்கே மீதான மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை, அணிக்கு இரண்டாண்டு தடை போன்ற கடினமான நினைவுகளை கண்முன்னே கொண்டு வருகிறார்.
அணியில் இருந்தபெரும்பாலான வீரர்கள் 33-34 வயதுக்குள் இருந்தததால் சென்னை அணியினை "Dads' Army" என்று கிண்டலடித்தனர்.ஆனால் அதையெல்லாம் தாண்டி ரசிகர்களின் கனவை நிறைவேற்றுவது தான் மிகவும் மகிழ்ச்சியான தருணம்.மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய தோனி,முதல் எபிசோட் முடியும் போது கண்களில் கண்ணீருடன் சென்னை அணி மீட்டிங்கில் உள்ளது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
தோனியின் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய முதல் எபிசோட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இதன் முலம் தோனிக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் பிரிக்கமுடியாத ஒன்று என ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
What doesn't kill you, makes you stronger.
— Hotstar Specials (@HotstarSpecials) March 20, 2019
Watch #RoarOfTheLion, now streaming on #HotstarSpecials. https://t.co/mKn2EydLNG pic.twitter.com/IvzhHRahxc