விமான கண்காட்சி பகுதியில் திடீர் தீ விபத்து, 100 கார்கள் எரிந்து நாசம், பரபரக்க வைக்கும் காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடக்கும் இடத்திற்கு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 -க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்துள்ளன.

விமான கண்காட்சி பகுதியில் திடீர் தீ விபத்து, 100 கார்கள் எரிந்து நாசம், பரபரக்க வைக்கும் காட்சிகள்!

கடந்த 1996 -ஆம் ஆண்டு முதல் ஏரோ இந்தியா விமான கண்காட்சி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விமான கண்காட்சி கடந்த 20 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த 19 -ம் தேதி இந்த கண்காட்சிக்கான ஒத்திகைப் பார்க்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் விமான கண்காட்சியைப் பார்க்க வருபவர்களுக்காக பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. இதனால் கண்காட்சியை பார்க்கவந்தவர்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென கார் பார்க்கிங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 100 -க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன. தகவலறிந்து உடனே வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போரடி அணைத்தனர். இது குறித்து தீயணைப்புத் துறையினர் கூறியதில், கேட் 5 -ல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 100 -க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்துள்ளன என தெரிவித்தனர். மேலும் தரையில் இருந்த புற்களின் மூலம் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

BENGALURUAIRSHOW, FIRE, BIZARRE