'ரிஷாப் பன்டிற்கு அடித்தது ஜாக்பாட்'...தமிழக வீரரை கழற்றி விட்ட பிசிசிஐ...மீண்டும் அசத்திய பும்ரா!
முகப்பு > செய்திகள் > தமிழ்இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.அதில் பும்ரா ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது ஏ பிளஸ், ஏ, பி, சி என்ற நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நான்கு பிரிவில் வீரர்களுக்கு ஊதியமானது வழங்கப்படுகிறது.அதன்படி ஏ பிளஸ் பிரிவில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ஒரு கோடியும் என ஒப்பந்தம் செய்யப்படும். இதுதவிர, ஒவ்வொரு போட்டிகளுக்கும் தனித்தனியாகவும் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஏ பிளஸ் பிரிவில் இருந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், அதில் இருந்து ஏ பிரிவுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஏ பிளஸ் பிரிவில், கேப்டன் விராத் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ.7 கோடி.
ஏ பிரிவில், ஆர். அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், புஜாரா, ரஹானே, தோனி, ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் ரூ.5 கோடிஇதனிடையே நடந்து முடிந்த தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப், ரிஷாப் பன்ட் ஆகியோர் ஏ பிரிவுக்கு முன்னேறி இருக்கின்றனர்.
பி பிரிவில், இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோருக்கு ரூ.3 கோடி வழங்கப்படும்.இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பியதால் அணியிலிருந்து நீக்கப்பட்ட தமிழக வீரர் முரளி விஜய், இந்த வருடம் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த வருடம் வரை ஊதிய ஒப்பந்தத்தில், ஏ பிரிவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.