'மோடியும் இவரும் ஒண்ணு'...மோடியை கிண்டலடித்த நெட்பிளிக்ஸ் ஷோ...ட்ரெண்டிங்யில் காமெடியன்!
முகப்பு > செய்திகள் > தமிழ்இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வுடன் ஒப்பிட்டு தனது நெட்பிளிக்ஸ் ஷோவில் பேசிய ஹசன் மின்ஹஜ்விற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஹசன் மின்ஹஜ்,ஒரு ஸ்டேன்ட்அப் காமெடியன்.இவர் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஹசன் மின்ஹஜ் உடன் தேசப்பற்று சட்டம் (Patriot Act with Hasan Minhaj) என்ற தலைப்பில் ஸ்டேன்ட் அப் காமெடி நிகழ்ச்சி செய்துவருகிறார்.
ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளிலுள்ள தற்கால அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.இதனால் பல நாடுகளிலும் இவரின் 'ஹசன் மின்ஹஜ் உடன் தேசப்பற்று சட்டம்' நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனிடையே சமீபத்தில் ஹசனின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.மேலும் பல்வேறு ஊழல்கள் குறித்தும் பேசியிருந்தார்.இதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஹசன் மின்ஹஜ் கடுமையாக மோடி மற்றும் ஹிந்து எதிர்ப்பில் இருக்கிறார்.அதனால் தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அவர் நடத்துகிறார் என #BoycottNetflix என்ற ஹேஷ்டேக் மூலமாக தங்களின் எதிர்ப்பினை காட்டிவருகிறார்கள்.
இதனிடையே இந்தியாவில் வாழ்பவர்களும்,வருகின்ற தேர்தலில் தங்களின் வாக்குகளை செலுத்த இருக்கும் இளைஞர்களும் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியினை காண வேண்டும் என,பாடகர் விஜய் தட்லானி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பிரபல ஸ்டேன்ட் அப் காமெடியன் குணால் கன்ரா,தனது ஆதரவை ஹசன் மின்ஹஜ்விற்கு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அபதிவிட்டுள்ள அவர் 'மின்ஹஜ் நிகழ்ச்சி மிகவும் தைரியமாக உள்ளது.மிக தெளிவாக அந்த நிகழ்ச்சியினை ஹசன் மின்ஹஜ் நடத்தி செல்கிறார் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஊடகவியலாளர் ஜமால் கசோகியை சவுதி அரேபியா அரசு கொலை செய்த விவகாரத்தில்,சவுதி அரசை கடுமையாக விமர்சித்து நெட்பிளிக்ஸில் ஹசன் மின்ஹஜ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார்.அதற்கு சவுதி அரசு,நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.