'கல்யாணம் பண்ணிட்டு பாதிலேயே விட்டுட்டு போனா'...இது தான் நடக்கும்...மத்திய அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழ்திருமணம் செய்துவிட்டு மனைவியை கைவிட்டுச் சென்ற 45 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து,மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியா வரும் போது திருமணம் செய்துவிட்டு திடீரென மனைவியை கைவிட்டுச் செல்வதாக,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பல்வேறு பூகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இதனை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.இதன் முதல் கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி ''வெளிநாடுவாழ் இந்தியர் திருமணங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இவற்றை எல்லாம் ஆராய்வதற்காக ஒருங்கிணைந்த பல்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவானது திருமணம் செய்துவிட்டு தலைமறைவான கணவர்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.இதன் மூலம் 45 பேரின் பாஸ்போர்ட்களை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
இதனிடையே வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் கைவிடப்படும் பெண்களுக்கு தகுந்த நீதியினை வழங்குவதற்காக,மசோதா ஒன்றை மத்திய அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்தது.ஆனால் அந்த மசோதா நிறைவேறாமல் முடங்கியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டில் திருமணம் செய்துகொண்டால், அதை பதிவு செய்வதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது. மேலும் 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம், 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வழிவகுக்கிறது