'கோலியை அவுட் பண்ண ஐடியா கொடுத்தது'...'இந்திய ஆல்ரவுண்டர்' தான்..ஸ்ம்பா ஓபன் டாக்!
முகப்பு > செய்திகள் > தமிழ்இந்திய கேப்டன் விராட் கோலியை வீழ்த்தும் வியூகத்தை அமைத்து கொடுத்தது இந்திய முன்னாள் ஆல்ரவுண்டரும்,ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் என ஆடம் ஸம்பா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் இளம் பந்துவீச்சாளரான ஸ்ம்பா,கோலியை முதல் டி20 போட்டியில் 24 ரன்னிலும், ஹைத்ராபாத் ஒருநாள் போட்டியில் 44 ரன்னிலும் வீழ்த்தினார்.இதனால் பலரது பாராட்டினை அவர் பெற்றார்.ஸம்பா, கோலியை 13 ஆட்டங்களில் 4 முறை அவுட் ஆக்கியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2 முறை கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.இதனிடையே தன்னுடைய பந்து வீச்சின் ரகசியம் குறித்து பகிர்ந்து கொண்ட அவர்,என்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்கு காரணம் ஸ்ரீதரன் ஸ்ரீராம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் '' ஸ்ரீதரன் ஸ்ரீராம் இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார்.அவரது அனுபவம் இந்திய ஆடுகளத்தில் எப்படி பந்து வீசினால் இந்திய வீரர்களின் விக்கெட்டினை எளிதில் வீழ்த்த முடியும் என்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.அவர் ஓவ்வொரு இந்திய வீரர்களை நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார்.அது ஸ்பின்னர்கள் மூலம் இந்திய வீரர்களை எதிர்கொள்ளும் உக்தியை உருவாக்க உதவியாக அமைந்தது.
மேலும் கோலியை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.அவரை பற்றி தான் நாங்கள் டீம் மீட்டிங்கில் பேசுவோம்.அவர் கிரிக்கெட்டிற்கே நம்பிக்கை அளிக்க கூடிய சிறந்த வீரர்'' என புகழாரம் சூடியுள்ளார்.