'உலககோப்பையில இவருக்கு இடம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்'...அதிருப்தியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்உலகக் கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதால்,தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைப்பது கஷ்டம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் மே 30ம் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க இருக்கிறது.இதனால் ரசிகர்களிடையே கடுமையான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.உலகக்கோப்பை போட்டிகளுக்கு பல்வேறு அணிகளும் தயாராகி வருகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகும் விதமாக ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.அதன் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது.உலககோப்பைக்கு முன்பு நடைபெறும் இந்த போட்டிதான் கடைசி ஒரு நாள் போட்டி என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர்,“ரிஷப் பந்த் வரும்காலங்களில் நிச்சயமாக தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.ஆனால் வரும் உலகக்கோப்பையில் அவர் எவ்வாறு பொருந்துவார் என்பது மிகப்பெரிய கேள்வி குறி தான்.என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவே நான் நினைக்கிறேன்.
மேலும் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய தொடரில் இல்லாததால் அவர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பது என்பது கடினமான ஒன்று தான்.ஆனால் தேர்வு குழு என்ன முடிவு எடுக்கிறது என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்'' என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.