'ஜம்முவில் அடுத்த பயங்கரம்'...பேருந்து நிலையத்தில் 'குண்டு வெடிப்பு'...வெளியான வீடியோ காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளார்கள்.புல்வாமா தாக்குதலின் சோக வடு ஆறுவதற்குள் நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப் படை பயங்கரவாத முகாம்களில் மீது தாக்குதல் நடத்திய பிறகு,இரு நாட்டு எல்லை பகுதிகளில் கடும் பதட்டம் நிலவி வருகிறது.அவ்வப்போது எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூட்டினை நடத்தி வருகிறது.அதற்கு இந்திய தரப்பிலிருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.இதனால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தை குறிவைத்து இன்று மதியம் 12 மணி அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து பேசிய ஜம்மு ஐஜி பி.எம்.கே.சின்ஹா ''இந்த தாக்குதலில் 28 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.கையெறி வெடிகுண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவம் நடந்த பகுதியானது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே ஜம்முவில் நடந்த அசம்பாவிதம் குறித்த முதற்கட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
First visuals show the aftermath of the Jammu grenade blast at the Bus Stand. Injured people which includes old aged being helped by locals. At least 1-2 remain critical in GMC Jammu out of the 18 injured as of now. Praying for safety of one and all. pic.twitter.com/oiHZ3Iq1yK
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) March 7, 2019
MK Sinha, IGP Jammu on blast at bus stand: It was a grenade explosion, it has caused injuries to approximately 18 people, all shifted to hospital pic.twitter.com/TYBvQ9lpKj
— ANI (@ANI) March 7, 2019
#UPDATE 28 people injured in grenade explosion at Jammu bus stand https://t.co/4Zs62BD7xj
— ANI (@ANI) March 7, 2019