''வாகா'' உனக்காக காத்திருக்கிறது ''அபி''... கொண்டாட்டத்தில் மக்கள்...களைகட்டியிருக்கும் எல்லை பகுதி!
முகப்பு > செய்திகள் > தமிழ்பாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா திரும்ப உள்ள அபிநந்தனை வரவேற்க வாகாவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வாக எல்லையில் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கமாண்டர் அபிநந்தன்,தற்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ முகாமில் உள்ளார்.அங்கிருந்து அவர் விமானம் மூலம் லாகூர் அழைத்துவரப்பட உள்ளார்.அதன் பின்பு லாகூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் சாலை மார்க்கமாக வாக எல்லைக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்.இது தொடர்பான இறுதி கட்ட பணிகளில் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
அபிநந்தனை வரவேற்பதற்காக ஏராளமான மக்கள் வாக எல்லையில் குவிய தொடக்கி விட்டார்கள்.அவரை வரவேற்பதற்கு ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவரை வரவேற்பதற்கு பஞ்சாப் முதலமைச்சரான அமரீந்தர் சிங் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.அவர் எப்போது வாக எல்லைக்கு வருவார் என்ற உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.அவர் லாகூர் வந்த பின்பு அதற்கான நேரம் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.
இதனிடையே பஞ்சாபை சேர்ந்த ஏராளமான மக்கள் பூங்கொத்துகளுடன் வாக எல்லையில் குவிந்திருக்கிறார்கள்.அவர் இந்தியா வந்தவுடன் அவரது குடும்பத்தினரை சந்தித்த பின்பு அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது.அதன் பின்பு பாகிஸ்தானில் அவர் நடத்தப்பட்ட முழு விவரங்கள் கேட்கப்பட்டு, அது ராணுவக் குறிப்பில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.