'கோலி அப்பவே சொன்னாரு'...'போட்டியின் போது காயம் அடைந்த பிரபல வீரர்'...கடுப்பில் பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதனால் உலகக்கோப்பையில் அவர் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

'கோலி அப்பவே சொன்னாரு'...'போட்டியின் போது காயம் அடைந்த பிரபல வீரர்'...கடுப்பில் பிசிசிஐ!

23'ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் தற்போது தான் களைகட்ட தொடங்கியிருக்கிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும்,டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.இந்த ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

டெல்லி அணி பேட்டிங் செய்த போது 20-வது ஓவரின் கடைசிப் பந்தை பும்ரா வீசினார். எதிரணி பேட்ஸ்மேன் அடித்த பந்தை தடுக்க டைவ் அடித்தபோது, பும்ரா எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.வலியால் துடித்த பும்ராவால் தனது இடதுகையை தூக்க முடியவில்லை.உடனே மைதானத்திற்குள் வந்த மருத்துவக்குழு அவரை அழைத்து சென்று முதல் உதவி சிகிக்சை அளித்தது.

இதனிடையே பும்ரா காயம் அடைந்திருப்பது பிசிசிஐ நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து விட்டதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இருப்பினும் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் உலகக்கோப்பை போட்டிகளை மனதில் வைத்துக்கொண்டு கவனமாக விளையாட வேண்டும் என இந்திய கேப்டன் கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CRICKET, IPL, IPL2019, MUMBAI-INDIANS, DELHI CAPITALS, BUMRAH