'புதுசா யார எடுக்க போறாங்க?'...சென்னை,கொல்கத்தா அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பே சிஎஸ்கே அணியில் இருந்தும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தும் இரண்டு முக்கிய வீரர்கள் விலகியுள்ளார்கள்.இதனால் புதிய வீரர்களை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன.
12-வது ஐபிஎல் போட்டி வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.ஆனால் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை இன்னும் வெளியிடவில்லை. போட்டித் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில்,அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை அணியில் விளையாடும் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தற்போது தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையே டி20 போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் பந்து வீசும் போது லுங்கி இங்கிடிக்கு தோள்பட்டையில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டது.உடனே போட்டியிலிருந்து வெளியேறிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அவருக்கு தோள்பட்டையில் தசைநார் கிழிவு ஏற்பட்டது தெரியவந்தது.இந்த காயம் குணமாக 4 வாரங்கள் ஆகும் என்பதால் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக லுங்கி இங்கிடியால் விளையாடமுடியாது என தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளர் முகமது மூசாஜி தெரிவித்துள்ளார்.
இதனிடையே போட்டி தொடங்குவதற்கு முன்பே வெளிநாட்டு வீரர் ஒருவர் விலகி இருப்பதால் அடுத்த வீரரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.ஆஸ்திரேலியாவின் ரிச்சார்ட்ஸன், மே.இ.தீவுகள் வீரர் ஷெல்டன் காட்ரெல். இடது கை வேகப்பந்து வீச்சாளரான காட்ரெல்,மற்றும் மார் வுட் ஆகிய மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் இதே போன்ற இக்கட்டான சூழ்நிலையில் கொல்கத்தா அணியும் உள்ளது.தோள்பட்டை காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நார்ட்ஜே,இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காயம் காரணமாக 2 வேகப்பந்துவீச்சாளர்களை இழந்த நிலையில் தற்போது 3வதாக நார்ட்ஜேவும் விளையாடமுடியாது என அறிவித்திருப்பதால் கொல்கத்தா அணி யாரை தேர்வு செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.