‘அவருக்கான ப்ளான் மாறுனதுக்கு தோனியும் ரோஹித்தும்தான் காரணம்’.. அதிரவைத்த கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா  இடையேயான ஒருநாள் போட்டிகளின் ஒரு பகுதியாக 2வது போட்டி, மகாராஷ்டிராவின் நாக்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

‘அவருக்கான ப்ளான் மாறுனதுக்கு தோனியும் ரோஹித்தும்தான் காரணம்’.. அதிரவைத்த கோலி!

இதில் முதலி டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா பேட்டிங் செய்தது. ஆனால் ஓப்பனிங்கில் களமிறங்கிய ரோகித் ஷர்மா ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட ஆனதும், ஷிகர் தவான் 29 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனதும் அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

ஆனால் 4-வது விக்கெட்டுக்கு பின்னர் கோலிக்கு கைகொடுத்த விஜய் சங்கர் நிதானமாக இருந்ததால் கேப்டன் கோலி 116 ரன்கள் எடுத்து, (சர்வதேச போட்டிகளில் கோலியின் 40வது சதம்) அணியின் இலக்கான 250 ரன்களை எடுப்பதற்கு தன்னால் பாதிக்கு பாதி உதவ முடிந்தது.  அதே சமயம், கோலியுடன் கை கோர்த்திருந்த விஜய் சங்கர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 46 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக அரைச் அதத்தை தொடாமல் அவுட் ஆகினார்.  இதில் கடைசி ஓவரில் விஜய் சங்கர் எடுத்தது   11 ரன்கள்.  இறுதியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்த வெற்றி குறித்து பேசிய கோலி,  ஓப்பனிங் பேட்ஸ்மேனின் சுமாரான ஸ்கோரிங்கிற்கு பிறகு களத்தில் இறங்கும்போது, தலையை தொங்கப் போட்டுக்கொண்டு ஆடியதாகவும், ஆனால் நன்றாக விளையாடிய விஜய் சங்கர் துரதிர்ஷ்டமாக ரன் அவுட் ஆகிவிட்டார்.  ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் கைகொடுத்தது என்றும் கூறினார். 

மேலும், விஜய் சங்கரை 46-வது ஓவரில் கொண்டுவர தான் நினைத்ததாகவும், ஆனால் தோனி மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் ஆலோசித்த பின்புதான் பும்ரா-ஷமி பந்து வீசி இன்னும் 2 விக்கெட்டுகள் கிடைத்தாலே நாம் டாப்புக்கு போய்விடலாம் என்றனர். பிளான் செய்ததுபோல அதுவும் சரியாகவே நடந்தேறியது. விஜய் சங்கரோ ஸ்டம்ப் -டு- ஸ்டம்ப் வீசி ஆட்டத்தில் இந்திய அணியின் பலத்தை தக்க வைத்தார். பும்ராவெல்லாம் ஒரு சாம்பியன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் என்று கோலி கூறினார்.

VIRATKOHLI, VIJAY SHANKAR, BCCI, ODI, INDVSAUS