‘மும்பை மைண்ட் வாய்ஸ்’.. “டேய் எப்டி போட்டாலும் அடிக்கிறாண்டா”.. மரண காட்டுகாட்டிய ரிஷப் பண்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணிக்கு இமாலய இலக்கை டெல்லி அணி நிர்ணயத்துள்ளது.
இன்று மும்பை வாண்கேடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது .டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரீத்திவ் ஷா ஆகியோர் களமிறங்கினர். ப்ரீத்திவ் ஷா 7 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 16 இல் வெளியேறினார். பின்னர் ஷிகர் தவான் மற்றும் காலின் இங்ராம் ஆகியோர் ஜோடி அதிரடி காட்டியது. காலின் இங்ராம் 32 பந்துகளில் 46 ரன்கள் அடித்து வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் வெறும் 27 பந்துகளில் 7 சிக்சர், 7 பவுண்டரிகள் உடன் 78 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். பின்னர் 20 ஓவரின் முடிவில் டெல்லி அணி 213 ரன்களை குவித்தது.
இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 53 ரன்கள் அடித்துள்ளார்.